UAE Tamil Web

சூப்பர் மார்கெட் வாசலில் தொழிலாளருக்கு சரமாரி கத்திக்குத்து : 5 ஆயிரம் திர்ஹம்ஸ் பணத்திற்காக துபாயில் நிகழ்ந்த வெறிச்செயல்..!

KNIFE WITH BLOOD

அல் கூஸ் பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றின் வாசலில் நின்றிருந்த இரண்டு பேரை கத்தியால் கடுமையாகத் தாக்கிய 5 பேர் கொண்ட ஆசிய கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது.

21 வயதான பணியாளர் மற்றும் 43 வயதான தொழிலாளர் இந்த கும்பலின் கோர தாக்குதலில் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி 14 ஆம் தேதி, 21 வயது பணியாளரை கும்பல் 5000 திர்ஹம்ஸ் பணம் தரும்படி மிரட்டியிருக்கிறது. அவர் உடனடியாக மறுத்திருக்கிறார். அதன்பின்னர் 2 நாட்கள் கழித்து அல் கூஸ் பகுதியில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றிற்கு அவர் செல்கையில் கும்பல் வழிமறித்திருக்கிறது.

மீண்டும் பணம் கேட்டு கும்பல் மிரட்ட, பணியாளர் கறாராக மறுத்திருக்கிறார். உடனேயே அவர்மீது சூடான தேநீரை கும்பல் ஊற்றியிருக்கிறது. பின்னர் கத்தியால் தாக்கத் துவங்கவே, அருகில் இருந்த 43 வயதான தொழிலாளர் அவரைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார். இதனால் அவருக்கும் கத்திக்குத்து விழுந்திருக்கிறது.

அந்தக் கும்பல் மீது திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

KNIFE WITH BLOOD
0 Shares
Share via
Copy link