UAE Tamil Web

உடன் தங்கியிருந்தவரை கத்தியால் குத்தி குடலை உருவிய சைக்கோ கொலையாளி – அஜ்மானில் பரபரப்பு..!

murder-generic-2-

சினிமாக்களில் பொதுவாக சண்டையின்போது குடலை உருவிவிடுவேன் என காரசாரமாக பேசிக்கொள்வதைப் பார்த்திருப்போம். ஆனால் அஜ்மானில் உடன் தங்கியிருந்தவரை சண்டையின் காரணமாக ஒருவர் கத்தியால் குத்தியதில் அவரது குடல் சரிந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட 22 வயது நபரும், கொலைசெய்த 26 வயது நபரும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இருவருமே நிறை போதையில் இருந்திருக்கிறார்கள். சாதாரண கருத்துவேறுபாடு, சண்டையில் போய் முடிந்திருக்கிறது.

அப்போது சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து 22 வயது நபரின் வயிற்றில் குத்தியிருக்கிறார் அவர். சுருண்டு விழுந்தவரைப் பார்த்ததும் அங்கிருந்து கொலையாளி தப்பிக்கப் பார்த்திருக்கிறார். ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால் அவரால் அங்கிருந்து வெளியே செல்லமுடியாமல் தடுக்கி விழுந்திருக்கிறார்.

சம்பவம் குறித்து அருகில் குடியிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள், குற்றவாளியைக் கைதுசெய்தனர். நீதிமன்ற விசாரணையின்போது தனது குற்றத்தை தொழிலாளர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இறந்தவர் குடும்பத்திற்கு 2 லட்சம் திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

மேலும், தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் குற்றவாளி உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

murder-generic-2-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap