UAE Tamil Web

அமீரகம்: லீவு நாட்களிலும் வேலைக்குச் செல்கிறீர்களா..? அப்படியானால் அமீரக சட்டப்படி உங்களுக்கு ஊதியம் எவ்வளவு வழங்கப்பட வேண்டும் தெரியுமா..?

uae_public_holidays_resources1_

அமீரகத்தில் பண்டிகை நாட்கள் வார இறுதியோடு இணைந்து வந்தால் தாரளமாக விடுமுறையானது அளிக்கப்படும். ஆனால் சிலருக்கு தேசிய விடுமுறையின் போதும் வேலை இருக்கும். அப்படி அரசு விடுமுறை நாட்களில் ஒருவர் பணிக்குச் சென்றால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் என்ன? அமீரக தொழிலாளர் சட்டம் இதுபற்றி என்ன கூறுகிறது? பார்ப்போம் வாருங்கள்.

அமீரக தொழிலாளர் சட்டத்தின் 74 வது பிரிவின்படி தொழிலாளர்களுக்கு தேசிய விடுமுறை நாளன்று முழு சம்பளம் மற்றும் விடுமுறையும் அளிக்கப்பட வேண்டும்.

ஒருவேளை உங்களுடைய முதலாளி உங்களுடைய விடுமுறை அல்லது தேசிய விடுமுறை நாளன்று பணிக்கு வரச் சொன்னால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாள் உங்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் வேலைபார்க்கும் நாளுக்கு உங்களுடைய அடிப்படை சம்பளத்தில் இருந்து 50% கூடுதலாக அளிக்கப்படவேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு மாற்று விடுமுறை நாள் ஒதுக்கப்படவில்லை எனில், பணிபுரியும் நாளுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 150% அளவுள்ள தொகை வழங்கப்பட வேண்டும் என அமீரக தொழிலாளர் சட்டத்தில் 84 வது பிரிவு கூறுகிறது.

அமீரக சட்டப்படி தொழிலாளராக உங்களுக்கான உரிமைகள் என்ன? உங்களது குறைகள் குறித்து புகார் அளிக்க நீங்கள் மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தை (MOHRE) அணுகலாம்.

புகார் அளிப்பது எப்படி?

உங்களுடைய முதலாளி குறித்து நீங்கள் புகாரளிக்க விரும்பினால் அமீரக மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தை தொடர்புகொள்ளலாம். முதலாளி – தொழிலாளி இடையிலான சிக்கல்களை அமீரக தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து அமைச்சகம் உங்களுக்கு தீர்வை வழங்கும்.

புகாரளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட விதிமுறைகளைப் பயன்படுத்தவும்.

  • அமைச்சகத்தின் ஹாட்லைன் எண்ணான  800 60 க்கு கால் செய்யவும்.
  • MOHRE அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, தொழிலாளர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கலாம்.
  • www.mohre.gov.ae என்ற இணைய முகவரிக்குச் சென்று, தொழிலாளர் புகார் (labour complaint) என்பதைத் தேர்ந்தெடுத்தும் உங்களுடைய பிரச்சினையை தெரிவிக்கலாம்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது சேவைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கான அக்கவுண்டை துவங்க வேண்டும். அதற்கு உங்களுடைய பாஸ்போர்ட் எண் மற்றும் வொர்க் பெர்மிட் எண் (லேபர் கார்டு) ஆகியவை தேவைப்படும்.

புகாரளித்த 72 மணிநேரத்திற்குள் த்வா-ஃபோக் (Twa-fouq) மையத்திலிருந்து சட்ட வல்லுனர் ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார். உங்களுடைய சூழலைப் பொறுத்து உங்களுக்கு ஏற்ற சுமூகமான தீர்வை எட்ட அவர் வழிகாட்டுவார்.

இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

அதேபோல அமீரகத்தில் சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை என்றால் எப்படி? எங்கே? புகாரளிப்பது என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

uae_public_holidays_resources1_
5 Shares
Share via
Copy link
Powered by Social Snap