நீங்கள் அமீரகத்தில் வேலை செய்ய விரும்பினால், செல்லுபடியாகும் பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) வைத்திருப்பது கட்டாயமாகும்.
நீங்கள் அமீரகத்திற்குச் சென்று வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், அங்கு உங்களின் புதிய வேலைப் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஏனென்றால், சரியான வேலை அனுமதி இல்லாதது அமீரகத்தின் தொழிலாளர் சட்டங்களை கடுமையாக மீறுவதாகும்.
தேவையான பணி அனுமதி பெறாமல் பணிபுரிபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை மற்றும் 10,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஜனவரி 12ந் தேதி சமூக ஊடகங்களில், துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் மக்களை எச்சரித்திருந்ததது.
அரசு தரப்பில் வெளியிடப்பட்ட ஆலோசனையில், ”விசிட் விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைந்த ஒவ்வொரு வெளிநாட்டவரும், அந்த நாட்டில் பணிபுரிய விரும்பும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இல்லையெனில் அவருக்கு மூன்று மாதத்திற்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 10,000 க்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும் அல்லது இந்த இரண்டு அபராதங்களில் ஒன்று விதிக்கப்படலாம். அத்துடன் அவர் அமீரகத்தில் நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிடலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான அனுமதியை நான் எங்கிருந்து பெறுவது?
நீங்கள் தனியார் துறையில், ப்ரீ சோனில் அல்லது பொதுத் துறையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா? என்பதைப் பொறுத்து, தொடர்புடைய அதிகாரியால் உங்கள் பணி அனுமதி வழங்கப்படும்.
தனியார் துறைக்கான அனைத்து பணி அனுமதிகளும் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் (MOHRE) வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஒவ்வொரு ப்ரீ சோனும் தொழிலாளர் ஒப்பந்தங்கள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பிற்குள் உள்ள முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையிலான உறவுகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
பொதுத்துறையில், கூட்டாட்சி மட்டத்தில், ஃபெடரல் அத்தாரிட்டி ஃபார் கவர்ன்மென்ட் ஹூமன் ரிசோர்சஸ் (FAHR) அமைச்சகங்கள் மற்றும் ஃபெடரல் அதிகாரிகளுக்கான மனித வளங்களை நிர்வகிக்கும் பொறுப்பாகும் அமீரக உள்ளூர் அரசாங்க அதிகாரிகளால் இது நிர்வகிக்கப்படுகிறது.
ஒரு தொழிலாளியாக நீங்கள் எந்த அதிகார வரம்பிற்கு உட்பட்டவராக இருந்தாலும், அமீரகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் நீங்கள் பணிபுரியத் தொடங்கும் போது, உங்களிடம் சரியான பணி அனுமதி இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது.
#ثقافة_قانونية #نيابة_دبي #نيابة_الجنسية_والإقامة pic.twitter.com/YjxpVhji7u
— نيابة دبي (@DubaiPP) January 12, 2022