அமீரகத்தில் விசிட் விசாவில் வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் சரிவர இருப்பதை உறுதி செய்வது முக்கியமாகும், இல்லையெனில் அமீரக தொழிலாளர் சட்டங்களை கடுமையாக மீறுவதாகும்.
அமீரகத்தில் வேலைக்கான அனுமதி work permit இன்றி வேலை செய்பவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை மற்றும் 10,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்று துபாய் பொது வழக்கத்துறை எச்சரித்துள்ளது.
அரசு தரப்பில் வெளியிடப்பட்ட ஆலோசனையில் கூறப்பட்டுள்ளதாவது: விசிட் விசாவின் கீழ் அமீரகத்தில் பணிபுரிய வரும் அனைத்து வெளிநாட்டவரும் work permit பெற வேண்டும், இல்லையெனில் மூன்று மாதம் சிறைத் தண்டனை அல்லது 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இச்சட்டங்களை மீறுபவரை மாநிலத்திலிருந்து நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிடும்.
மேகும் நீங்கள் தனியார் துறையில் அல்லது பொதுத் துறையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா என்பதைப் பொறுத்து, தொடர்புடைய அதிகாரிகளல் உங்களுக்கு work permit வழங்கப்படும். தனியார் துறைக்கான அனைத்து பணி அனுமதிகளும் மனித வளங்கள் மற்றும் அமீரக அமைச்சகத்தால் (MOHRE) வழங்கப்படுகின்றன.
ஒரு தொழிலாளியாக நீங்கள் எந்த அதிகார வரம்பிற்கு உட்பட்டவராக இருந்தாலும், நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கும் போது, உங்களிடம் சரியான work permit இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும்.