துபாயில் பார்வையாளர்களை ஈர்க்கும் சாகச விளையாட்டுகளுடன் மிதக்கும் தண்ணீர் பூங்காவுக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு துபாய் சுற்றுலாத்துறை மற்றும் அமீரகத்தில் இயங்கிவரும் தனியார் சுற்றுலா நிறுவனமும் இணைந்து இந்த தண்ணீரில் மிதக்கும் பூங்காவை உருவாக்கியது.
இந்த தண்ணீர் பூங்காவானது துபாயின் சிறப்பு மிக்க பகுதியான ஜுமைரா கடற்கரை அருகில் அமைக்கபட்டடுள்ளது. இதில் ஏற்கனவே மிதக்கும் தண்ணீர் பூங்காவானது 252 அடி நீளமும் 115 அடி அகலமும் இருந்தது. சமீபத்தில் இந்த பூங்கா 3 மடங்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா ‘ஐ லவ் expo 2020 துபாய்’ என எழுத்துருக்களில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்து பார்க்கும்போது வாசகத்தை வைத்து பூங்காவை காணலாம்.
துபாய்க்கு அழகு சேர்க்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பூங்காவிற்கு உலகின் மிகப்பெரிய “மிதக்கும் தண்ணீர் பூங்கா” என்ற பிரிவில் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்ட்டுள்ளது.