UAE Tamil Web

EXPO 2020: உலகின் மிகப்பெரிய திருக்குர்ஆன் பாகிஸ்தான் அரங்கில் காட்சிக்கு வைப்பு..

துபாய் Expo2020 கண்காட்சியில் உள்ள பாகிஸ்தான் அரங்கில் உலகின் பிரமாண்டமான திருக்குர்ஆன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை பல்வேறு நாட்டை சேர்ந்த பார்வையாளர்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்து செல்கின்றனர்.

புனித திருக்குர்ஆனை தங்கம் மற்றும் அலுமனியத்தக் கொண்டு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷாகித்ரஜம் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த குர்ஆன் கடந்த 5 ஆண்டுகளாக கராச்சியில் உருவாக்கப்பட்டது. இதன் உயரம் 8½ அடியாகவும், அகலம் 6½ அடியாகவும் உள்ளது. ஒரு பக்கத்திற்கு 150 வார்த்தகைகளளுடன் மொத்தம் 550 பக்கங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருக்குர்ஆன் விரைவில் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்ற உள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap