UAE Tamil Web

அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம்!

India

அபுதாபியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்நடத்திய தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அபுதாபியில் முஸாஃபா பகுதி மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்தினர். வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கரிடமிருந்து இன்று தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, அமீரகத்தில் உள்ள சிவில் பகுதிகள் மீது பயங்கரவாத ஹவு தி போராளிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.


அமீரக மக்களுடன் இந்தியாவின் முழு ஒற்றுமையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன் இரு நாடுகள் பகிர்ந்து கொள்ளும் வலுவான ஒற்றுமையையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த கோழைத்தனமான பயங்கரவாதச் செயலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் கூறினார்.

ஷேக் அப்துல்லா, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடனும் பேசினார். அமீரகத்தில் உள்ள சிவில் பகுதிகளில், ஹவுதி போராளிகளின் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.


இதே போல், அமீரகத்துக்கு ஆதரவாக ஜப்பான், பாகிஸ்தான், ஈராக், எகிஸ்து உள்ளிட்ட உலக நாடுகளும் ஹவுதி போராளிகளின் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

India
3 Shares
Share via
Copy link