உலகளாவிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார ஆணையம் (UNESCO) அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் தேதியை உலகத்தின் எதிர்காலத்திற்கான நாளாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் தங்களது எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுக்கும் நாளாக இனி டிசம்பர் 2 இருக்கும்.
اعتمدت منظمة الأمم المتحدة للتربية والعلم والثقافة (اليونسكو) بالإجماع اليوم الوطني لدولة الإمارات الموافق الثاني من ديسمبر يوماً عالمياً للمستقبل تحتفي فيه كافة دول العالم باستشراف مستقبلها التنموي وجاهزيتها في صناعة فرصها وخططها لأجيالها المقبلة..
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 25, 2021
இதுகுறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இது, நமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கும், தேவையான மாற்றங்களோடு வேகத்தைக் கடைப்பிடிப்பதற்கும், வாய்ப்புகளிலிருந்து பயனடைவதற்கும் ஒரு உலகளாவிய மாதிரியாக இருப்பதற்குமான பொறுப்பை நமக்கு வழங்கியிருக்கிறது. நமது நாடு ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பெரிதாக வளர்ச்சியடைந்துவருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
الاعتراف الدولي بدولة الإمارات كدولة للمستقبل ونموذج لاستشرافه ومحطة رئيسية لصناعته هو تقدير عالمي يضع علينا مسؤولية أكبر في تطوير قدراتنا لنكون نموذجاً لاستشراف المستقبل ومواكبة متغيراته والاستفادة من فرصه أمام كافة حكومات العالم.. كل عام ودولتنا بخير ومستقبلنا أفضل وأكبر واعظم
— HH Sheikh Mohammed (@HHShkMohd) November 25, 2021