அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபி வாழ் முஸ்லீம் அல்லாதவர்களுக்கான முதல் சிவில் சட்டத்தை அறிவித்திருக்கிறார்.
முஸ்லீம் அல்லாதவர்களுக்கான திருமணம், விவாகரத்து, குழந்தை வளர்ப்பில் இருவருக்குமான கடமைகள், பரம்பரை சொத்து விவகாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 ஷரத்துகள் இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, உலகத்தரத்திலான நீதிபரிபாலனம் அவர்களுக்குக் கிடைக்க இந்தச் சட்டம் உதவும் என அபுதாபி நீதித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பல்வேறு நாட்டு மக்கள் வசிக்கும் அபுதாபியில் இயற்றப்பட்டுள்ள இச்சட்டத்தினால் அம்மக்களது உரிமைகள், சொத்து விவகாரம் மற்றும் குடும்ப சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நீதித்துறை தெரிவித்துள்ளது.
