துபாயில் தொழில்நுட்ப நுண்ணறிவுடன் ஓட்டுநர் இன்றி இயங்க கூடிய ரோந்து வாகனங்களை துபாய் காவல்துறை வெளியிட்டுள்ளது.
துபாய் சாலைகளில் குற்றங்களை கண்காணிப்பதற்கான ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ரோந்து வாகனம் விரைவில் துபாய் காவல்துறையில் சேர்க்கப்படவுள்ளது.
இந்த ரோந்து வாகனம் துபாயில் நடக்கும் குற்றத்தை கண்காணித்து காவல்துறை செயல்பாட்டு மையத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.
துபாய் EXPO-வில் நடந்த உலக காவல்துறை மாநாட்டின் தொடக்க நாளில் இந்த அதிநவீன ரோந்து வாகனம் காட்சிக்கு வைக்கப்பட்டன. துபாய் காவல்துறையில் கீழ் செயல்பட இருக்கும் ஓட்டுநர் இல்லாத வாகனம் இரண்டு வெவ்வேறான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.