UAE Tamil Web

சம்பளத்தினை சரியாக வழங்காத 3000 முதலாளிகள் மீது பாயும் வழக்கு! அரபு அரசு அதிரடி!

uae-employee-salary

ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளமானது WPS என்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் மூலம் வழங்கப்பட வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த அமைப்பின் மூலம் சம்பளம் ஆனது மின்னணு பரிமாற்ற முறையில் தொழிலாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அதிகாரிகள் 3,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கண்டறிந்து ஊதிய பாதுகாப்பு அமைப்பு (WPS) மூலம் சம்பளம் வழங்கத் தவறியதற்காக பொது வழக்கு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (மொஹ்ரே), தரவுகளின் அடிப்படையில் நேரடி ஆய்வுகளின் மூலமும் மற்றும் மின் ஆய்வு அமைப்புகள் மூலமும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகின்றது.

அதன்படி 2022 ஆம் ஆண்டில், அமைச்சகம் தனியார் துறை நிறுவனங்களில் 612,000 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை நிறைவு செய்தது. அதன்படி ஆய்வாளர்கள் 12 ஆயிரத்துக்கும் நிறுவனங்கள் விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டு அதன்படி அவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

விதி மீறல்களில் தொழிலாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய தவறியது, ஹெல்த் அண்ட் சேஃப்டி கைடு லைன், WPS விதிகள், தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்காதது, கோடை மாதங்களில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடைவேளையை கடைபிடிக்காதது ஆகியவை அடங்கும்.
மேலும் பணியாளர்களுக்கு தரவேண்டிய ஒப்பந்தங்கள் மற்றும் ஒரு பர்மீட்டுகளை சரியாக வராதது,உரிமம் பெறாத வேலை அல்லது தற்காலிக வேலைவாய்ப்பு நிறுவனம், போலி எமிரேட்டேஷன் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களின் ஆவணங்களை முதலாளி வைத்திருப்பது போன்றவை இந்த விதிமுறைகளில் அடங்கும்.

மனிதவள விவகாரங்களுக்கான துணைச் செயலர் கலீல் அல் குரி கூறியதன் படி, விதிகளை சரியாக கடைபிடிக்காத நிறுவனங்களை கண்டறிவதற்கு ஆட்டோமேஷன் செயல் முறையை அரசு நடைமுறைப்படுத்தியதன் மூலம் வெளிப்படையான,துல்லியமான ஆய்வு முடிவுகள் கிடைத்துள்ளதாக மோஹ்ரே தெரிவித்துள்ளது.

எமிரேடிசேஷன் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், தொழிலாளர் விவகாரங்களுக்கான துணைச் செயலாளருமான ஆயிஷா பெல்ஹார்ஃபியா கூறுகையில், 2022 ஆம் ஆண்டில், அமைச்சகம் சுமார் 81 சதவீத தொழிலாளர் புகார்களை சுமுகமாகத் தீர்த்தது, மீதமுள்ள 19 சதவீதம் தொழிலாளர் பிரச்சனைகள் நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் அவர் கூறுகையில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாப்பதற்கும் அவர்கள் உரிமைகளை நியாயமான முறையில் உத்தரவாதப்படுத்துவதற்கும் அரபு அரசானது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மேலும் சர்வதேச தொழிலாளர் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதற்கு ஏற்ப அரசானது வலுவான ஒழுங்கு முறையினை கொண்டு வர எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மேலும் இந்த சட்டமானது பிரத்யேக சட்ட ஆய்வாளர்களால் வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் தொழிலாளர்கள் அவர்களது புகார்களை சமர்ப்பிப்பதற்கும், கையாளுவதற்கும் ஏற்ப நடைமுறைகளை எளிதாக்குகின்றது என்று தெரிவித்தார்.

மேலும் புகார் தெரிவிப்பவர் மற்றும் எதிராளி ஆகிய இருவருக்கும் நேரத்தையும், முயற்சியையும் சேமிக்கும் நோக்கோடு இரு தரப்பினருக்கு இடையே இணக்கமான தீர்வுகளை கண்டறியும் படி சட்ட ஆராய்ச்சியாளர்கள் விதிமுறைகளை எழுதியுள்ளனர்.

எனவே அரபு அரசானது தொழிலாளர்களுக்கு அவர்கள் பணி புரியும் இடத்தில் எவ்வித உபாதைகளும் இல்லாமல். அவர்களது ஊதியங்களை சரியான முறையில் பெற்று தர எல்லாம் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap