37.7 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

அபுதாபி : 50 சதவிகிதம் வரையிலும் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கும் தீம் பார்க்குகள் – ஒரு வார காலத்திற்கு மட்டுமே இந்த அதிரடி தள்ளுபடி..!

Yas_Theme_Parks-abu-dhabi

அபுதாபியின் பிரபல தீம் பார்க்குகள் ஒரு வார காலத்திற்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்திருக்கின்றன. செப்டம்பர் 1 – 5 வரையிலான தேதிகளில் ஃபெராரி வேர்ல்டு அபுதாபி (Ferrari World Abu Dhabi), யாஸ் வாட்டர் வேர்ல்டு (Yas Waterworld), வார்னர் ப்ரோஸ். வேர்ல்டு அபுதாபி (Warner Bros. World Abu Dhabi) ஆகியவை தங்களது கட்டணத்தில் தள்ளுபடிகளை வழங்குகின்றன.

யாஸ் வாட்டர் வேர்ல்டுக்குள் நுழைய ஒரு நபருக்கு 130 திர்ஹம்ஸ் தொகையும், ஃபெராரி வேர்ல்டு அபுதாபிக்குள் நுழைய 150 திர்ஹம்ஸ் தொகையும், வார்னர் ப்ரோஸ். வேர்ல்டு அபுதாபிக்குள் நுழைய 195 திர்ஹம்ஸ் தொகையும் கட்டணமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, யாஸ் வாட்டர் வேர்ல்டு – 48 சதவிகித தள்ளுபடியையும், ஃபெராரி வேர்ல்டு அபுதாபி – 49 சதவிகித தள்ளுபடியையும், வார்னர் ப்ரோஸ். வேர்ல்டு அபுதாபி – 33 சதவிகித தள்ளுபடியையும் அளிக்கின்றன.

அந்தந்த தீம் பார்க்குகளின் இணையதளத்தில் மட்டுமே இந்த டிக்கெட்டை வாங்கவேண்டும். அதேநேரத்தில் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 1 – 5 வரையிலான தேதிகளில் நீங்கள் வாங்கும் டிக்கெட் செப்டம்பர் மாதம் முழுவதும் செல்லுபடியாகும். ஆகவே, செப்டம்பர் மாதத்தில் நீங்கள் மேற்கண்ட பார்க்குகளுக்கு செல்ல விரும்பினால் இப்போதே அதற்கான டிக்கெட்டை அதிரடி தள்ளுபடி விலையில் பெற்றுப் பயன்பெறுங்கள்.

டுகெதர் அட் யாஸ் ப்ரோமோஷன் (TogetherAtYas promotion) மூலமாக தீம் பார்க்குகளில் உள்ள விடுதிகளில் ஒரு இரவுக்கான தங்குதல் கட்டணத்தில் தள்ளுபடியைப் பெறலாம். இந்த திட்டம் இந்தாண்டு இறுதிவரையில் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடியில் தங்குமிடம்

அபுதாபியில் உள்ள சென்ட்ரோ யாஸ் ஐஸ்லேன்ட் (Centro Yas Island), W அபுதாபி – யாஸ் ஐஸ்லேன்ட் (W Abu Dhabi -Yas Island), ரேடிசன் ப்ளூ அபுதாபி (Radisson Blu Abu Dhabi), யாஸ் ஐஸ்லேன்ட் (Yas Island) உள்ளிட்ட 20 தங்கும் விடுதிகளில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு இரவிற்கு ஒரு நபருக்கு 323 திர்ஹம்ஸ் தொகை முதலும், இரு இரவுகளுக்கு ஒரு நபருக்கு 650 திர்ஹம்ஸ் தொகை முதலும், மூன்று இரவுகளுக்கு ஒரு நபருக்கு 756 திர்ஹம்ஸ் தொகை முதலும் கட்டணங்களானது வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!