அமீரகத்தின் பொன்விழா ஆண்டையொட்டி புதிய ஆஃபர் ஒன்றினை அறிவித்திருக்கிறது லூலூ குழுமம். அமீரகம் முழுவதிலுமுள்ள 87 லூலூ மார்கெட்களில் அக்டோபர் 21 முதல் டிசம்பர் 9 ஆம் தேதிவரையில் தினசரி 50 விதமான பொருட்களுக்கு 50% தள்ளுபடியை அளிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
“UAE Proud 50 திட்டத்தின் கீழ், மளிகை, டிஜிட்டல், எலெக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் பொருட்கள் என மொத்தம் 4000 பொருட்களுக்கு 50% தள்ளுபடி அதுவும் 50 நாட்களுக்கு வழங்க இருக்கிறோம். தினசரி தள்ளுபடி அளிக்கப்படும் பொருட்களின் வகைகள் தினந்தோறும் மாற்றப்படும்” என லூலூ குழுமத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்ற துறை இயக்குனர் V. நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
100 திர்ஹம்ஸ் செலவழிக்கும் வாடிக்கையாளர்கள் 2.5 கிலோ தங்கம் வெல்லும் டிராவில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கான குலுக்கல் அமீரக தேசிய தினமான டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 50 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 50 கிராம் தங்கம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Proudly from UAE என்னும் திருவிழா மூலம் உள்ளூர் விவசாய மற்றும் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்தவும் இங்கே வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
