UAE Tamil Web

அமீரகத்தில் புழக்கத்தில் விடப்பட இருக்கும் புதிய பண நோட்டுகள்..!

dirhams

அமீரக யூனியன் உருவாக்கப்பட்டதன் 50 வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் நோக்கில் மூன்றாவது மற்றும் புதிய பண நோட்டுகளை புழக்கத்தில் விட இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

- Advertisment -

புதிய பணத்தாளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் (security marks) இடம்பெறும் எனவும், உலகத்தரத்திலான அளவில் புதிய பணத்தாள்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது காஸிர் அல் வதானில் கடந்த புதன்கிழமையன்று துணைப் பிரதமரும் மந்திரி சபையின் விவகாரத்துறை அமைச்சரும் அமீரக மத்திய வங்கியின் தலைவருமான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களது தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துல் ஹமித் முகமது சயீத் அல் அஹ்மாதி ஓய்வு பெற இருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து காலித் முகமது சலீம் பலம் தமிமி அவர்கள் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்.

வங்கி, நிதி, சொத்து நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தமிமி இதற்கு முன்னர் துணை ஆளுநராக பதவிவகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக இயக்குனர் குழுவின் துணைத் தலைவரான அப்துல் ரஹ்மான் சலே அல் சலே கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தின்போது தேசிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களை விரிவாக்க விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் விரிவான பொருளாதார திட்டங்கள் மற்றும் கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி அழுத்தங்களில் இருந்து வெளியேறும் வழிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மத்திய வங்கி 50 பில்லியன் டாலர் அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பூஜ்ஜிய செலவு வசதியை 2021 இறுதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.