UAE Tamil Web

முக்கியச் செய்தி: பொதுமக்கள் நாளை துபாய் எக்ஸ்போவை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்..!

expo 2020

அமீரகத்தில் நாளை 50வது தேசிய தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை டிசம்பர் 2 ஆம் தேதி, பொதுமக்கள் துபாய் எக்ஸ்போ 2020 ஐ இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் 192 நாடுகள் தங்களது பெவிலியனை அமைத்துள்ளன. இதில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை எக்ஸ்போ நுழைவு வாயிலில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் இலவசமாக மக்கள் எக்ஸ்போ டிக்கேட்டினைப் பெற்றுச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாளை எக்ஸ்போவின் அல் வாஸில் அவென்யூவில் கண்கவர் வாணவேடிக்கைகள் நடத்தப்பட இருக்கிறது. துபாய் மற்றும் அபுதாபியில் எங்கெல்லாம் வாணவேடிக்கைகள் நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap