அமீரகத்தின் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு, பிற எமிரேட்களில் இருந்து துபாய் வருவோருக்கு எக்ஸ்போ 2020 க்கான டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 முதல் இரண்டு வாரங்களுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் எல்லை பாதுகாப்பு கவுன்சில், குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறைக்கான தலைமை இயக்குனரகம் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
பிற எமிரேட்களில் இருந்து துபாய் வருவோர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் எக்ஸ்போ டிக்கெட்டினை பெற்றுக்கொள்ளலாம்.