UAE Tamil Web

துபாயில் இனி வாட்ஸ்அப் மூலம் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தலாம்.. விபரம் உள்ளே..!

துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் வாட்ஸ்அப் செயலி மூலம் பார்க்கிங் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தலாம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமான (RTA) அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வாட்ஸ்அப் செயலியில் பார்க்கிங் கட்டணம் செலுத்துவதன் மூலம் வாகன ஓட்டிகள் 30 பில்ஸை சேமிக்க முடியும்.

“971 58 8009090 என்ற எண்ணில் RTA இன் Chatbot Mahboub-க்கு வாட்ஸ்அப் மெச்சேஜ் செய்து பார்க்கிங்கிற்கான கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம். இந்த மெசேஜ் கட்டணத்தில் 30 ஃபில்ஸ் சேமிக்கலாம்” என்று RTA கூறியுள்ளது.

RTA இன் Chatbot Mahboub-க்கு வாட்ஸ்அப் மெசேஜில் பார்க்கிங்கிற்கான கட்டணம் செலுத்துவது எப்படி?
  • வண்டி எண் (இடைவெளி) பார்கிங்க் ஜோன் எண் (இடைவெளி) வாகனம் நிறுத்தும் மணிநேரம்.
  • இந்த பார்க்கிங் டிக்கெட் கட்டணம் வாகன ஓட்டிகளின் டிஜிட்டல் வேலட்டில் இருந்து கழிக்கப்படும்.
  • இருப்பினும், வாகன ஓட்டிகள் பொது வாகன நிறுத்தத்திற்கும் மெசேஜ் மூலம் பணம் செலுத்தலாம்.

முன்னதாக மார்ச் 28 அன்று, வெள்ளிக்கிழமைகளில் இருந்து இலவச பார்க்கிங் வசதி ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றுவதாக RTA அறிவித்தது. ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 14 மணி நேரம் பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படும்.

மேலும் போக்குவரத்து அபராதம், ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் குறித்த தகவல்களையும் வாட்ஸ்அப் மூலம் கேட்கலாம் என்று RTA முன்பு கூறியது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap