UAE Tamil Web

கணநேரத்தில் சிதறிய கவனம்; மோதிச் சிதறிய கார் – 19 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்..!

nat-rak-accident-

ராஸ் அல் கைமாவில் சாலையோர விளக்குக் கம்பத்தின்மீது மோதிய கார் விபத்திற்குள்ளானதில் காரை இயக்கிய 19 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோர்க்வீர் சாலையில் நேற்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கவனச் சிதறல் காரணமாக காரின் கட்டுப்பாட்டை இளைஞர் இழந்ததால் காரானது நேரடியாக விளக்குக் கம்பத்தின்மீது சென்று மோதியிருக்கிறது. இதனால் கடுமையாக அவர் காயமடைந்திருக்கிறார். இதுகுறித்து ராஸ் அல் கைமா காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்துவந்து அவருக்கு முதலுதவி செய்தது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கையில் அதீத காயம் காரணமாக இளைஞர் உயிரிழந்திருக்கிறார்.

பிணக்கூறாய்விற்காக இளைஞரின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆய்விற்குப் பிறகு உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாகனவோட்டிகள் கவனச் சிதறல் இல்லாமலும் சாலை விதிகளை மதித்தும் வாகனங்களை இயக்குமாறும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

nat-rak-accident-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap