UAE Tamil Web

“துபாயில் நடந்த Expoவில் நாங்கள் பங்கேற்க காரணம் ரகுமான் தான்” – சுவாரசியமான தகவலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா!

நமது துபாயில் நடைபெறும் நிகழ்ச்சியில் எப்போதுமே மிக பிரமாண்டமாகத் தான் நடத்தப்படும். அந்த வகையில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு தான் Dubai Expo 2020. கடந்த 2020ம் ஆண்டு நடக்கவிருந்த இந்த Expo பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போனது.

இறுதியில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் Expo முடிவடைந்தது. இந்நிலையில் இந்த Expo குறித்த ஒரு சுவாரசியமான தகவலை தற்போது ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

துபாயில் நடந்த இந்த நிகழ்வில் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இசைஞானி இளையராஜா, அவரது மகன் யுவன் மற்றும் அனிரூத் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேசிய யுவன், முதலில் Expoவில் இசைக்கச்சேரி நடத்த ரகுமானுக்குத் தான் அழைப்பு விடுக்கப்பட்டது என்றும். பிறகு விழாக்குழுவினருடன் பேசிய ரகுமான் எங்கள் மண்ணில் பல சிறப்பான இசைக்கலைஞர்கள் இருப்பதாகவும் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று கூறி தனது தந்தையின் பெயர், தனது பெயர் மற்றும் அனிரூத்தின் பெயரை அவர் கூறியதாகவும் யுவன் குறிப்பிட்டார்.

ஆகையால் Dubai Expo 2020ல் நாங்கள் பங்கேற்றதற்கு ரகுமான் தான் மிகமுக்கிய காரணம் என்று அவர் கூறிய ரகுமானை பெருமைப்படுத்தியுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap