தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக விருப்பமான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவில் அதிகமான திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று துபாய் EXPO 2020-வில் இந்திய அரங்கில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய துபாய் EXPO 2020, மார்ச் மாதம் 31 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த கண்காட்சியில் மொத்தம் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள அரங்கில், தற்போது தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
துபாய் EXPO 2020 கண்காட்சிக்கு தமிழக சார்பில் அரசு துறைகள் பங்கேற்க தமிழக அரசு ஏற்கனவே ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், கண்காட்சியில் பங்கேற்க மார்ச் 26, 27 ஆம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.