UAE Tamil Web

துபாய் EXPO-வில் இசை நிகழ்ச்சி நடத்த வருகை தரும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பாளராக 25 ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் வருகிற மார்ச் 20ம் தேதி துபாய் EXPO கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக டிவிட்டரில் யுவன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக துபாய் EXPO-வின் இந்திய அரங்கில் யுவனின் தந்தையான இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்னால் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது அந்நிகழ்ச்சியை காண பல நாட்டு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. துபாய் EXPO இந்திய அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கூட்டத்துடன் இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கிய துபாய் EXPO 2020, மார்ச் மாதம் 31 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த கண்காட்சியில் மொத்தம் 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியில் இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள அரங்கில், தற்போது தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap