UAE Tamil Web

முடங்கிய பேஸ்புக் ; சில மணிநேரங்களில் 700 கோடி டாலர்களை இழந்த பேஸ்புக் நிறுவனர்..!

mark-zuckerberg-loses-7-billion-dollar

நேற்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப் ஆகிய சமூக வலைத்தளங்கள் உலகளவில் முடங்கின. இதனால் பலகோடி மக்களால் இந்த அப்ளிகேஷன்களை உபயோகிக்க முடியாமல் தவித்த நிலையில் பேஸ்புக் நிறுவனர் இதற்கு மன்னிப்புக்கோருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல ஊடகமான ப்ளூம்பெர்க் நேற்று நடைபெற்ற பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சாப் முடக்கத்தால் அதன் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை மட்டும் பேஸ்புக்கின் 4.9% பங்குகள் விற்பனைக்கு வந்ததால் மார்க்கின் தனிப்பட்ட சொத்துமதிப்பு 121.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. இதனால் ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் நான்காம் இடத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முன்னேற, மார்க் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

சில மணிநேரங்களில் 700 கோடி அமெரிக்க டாலர்களை இழந்த மார்க் குறித்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் பேசிவருகின்றனர்.

mark-zuckerberg-loses-7-billion-dollar
3 Shares
Share via
Copy link