UAE Tamil Web

துபாய்: 12 மணிநேர அதிரடி விற்பனை ; 90% வரை தள்ளுபடி – முந்துங்கள் மக்களே..!

SHOPPING

ஜூலை 1 ஆம் தேதி துபாய் சம்மர் சர்ப்ரைஸ் திருவிழாவின் முதல் நாளில் அதிரடி தள்ளுபடி திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மணிநேரம் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 100 பிராண்டுகளுக்கு 25 – 90% தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது.

மஜீத் அல் ஃபுட்டைம் மால்களில் (Majid Al Futtaim) வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் இரவு 10 வரையில் இந்த தள்ளுபடி திருவிழா நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மால் ஆப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates), சிட்டி செண்டர் மிர்திஃப் (City Centre Mirdif), சிட்டி செண்டர் தேரா (City Centre Deira), சிட்டி செண்டர் மெய்சாம் (City Centre Me‘aisem), மை சிட்டி செண்டர் அல் பார்ஷா (My City Centre Al Barsha) மற்றும் சிட்டி செண்டர் அல் ஷிண்டாகா (City Centre Al Shindagha) ஆகிய மால்களிலும் இந்த தள்ளுபடி விழா நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு மாலும் தங்களுக்கே உரித்தான செயல்பாடுகள், குடும்பங்களுக்கான நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் வெகுமதிகளை வழங்கும்.

இந்த ஆண்டு 300 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல் செலவு செய்யும் மக்கள் ஒரு மில்லியன் மஜீத் அல் ஃபுட்டைம் ஷேர் வெகுமதி புள்ளிகளை (SHARE reward points) வெல்வதற்கான டிராவில் நுழையலாம். SHARE அப்ளிகேஷனில் தங்களது ரசீதுகளை ஸ்கேன் செய்து டிராவில் கலந்துகொள்ளலாம். இதன் வெற்றியாளர் ஜூலை 4 ஆம் தேதி அறிவிக்கப்படுவார்.

இந்தாண்டு துபாய் சம்மர் சர்ப்ரைஸ் நிகழ்ச்சிக்கு வளைகுடா நாடுகளான சவூதி, குவைத், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து மக்களை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHOPPING
0 Shares
Share via
Copy link