UAE- இல் 17 நாட்கள் மெகா தள்ளுபடி விற்பனை அடுத்த வாரம் துவக்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் 17 நாட்கள் மெகா தள்ளுபடி விற்பனை அடுத்த வாரம் ஷார்ஜாவில் தொடங்க இருக்கிறது.

அடுத்த வாரம் 23 ஆம் தேதி Expo Centre Sharjah -வில் மெகா அதிரடி தள்ளுபடி விற்பனை தொடங்குகிறது. இந்த விற்பனையில் 80% வரை தள்ளுபடியில் ஷாப்பிங் செய்யலாம்.

ரமலான் மாதத்தில் விற்பனை நேரம் இரவு 8 மணியிலிருந்து அதிகாலை 2 மணிவரை உண்டு. அதே போல் ஜூன் மாதத்தில் Eid விடுமுறை தினங்களில் விற்பனை நேரம் மாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உண்டு, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பிராண்டுகள் அனைத்திற்கும் தள்ளுபடி விற்பனை. மேலும், வாடிக்கையாளர்கள் வசதிக்காக கார் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.