UAE Tamil Web

துபாய்: 3 நாள் அதிரடி விற்பனை : வாங்கும் பொருட்களுக்கு 90 சதவீதம் வரையில் தள்ளுபடி..!

Shopping

துபாயில் கோலாகலாமாக நடைபெற்றுவந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) நிகழ்வின் 24 வது பதிப்பு இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் இறுதிகட்ட விற்பனையை அதிகரிக்க 90 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிக்க இருப்பதாக DSS அறிவித்துள்ளது.

ஃபேஷன், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு செப்டம்பர் 2 முதல் 4 ஆம் தேதிவரையில் இந்த தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

கடந்த 10 வாரங்களாக நடைபெற்றுவந்த இந்த பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழா நிறைவடைவதை முன்னிட்டு இந்த அதிரடி இறுதிகட்ட தள்ளுபடியை இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் துபாய் வர்த்தகம் மற்றும் சில்லறை ஸ்தாபனங்கள் தெரிவித்துள்ளது.

Shopping
4 Shares
Share via
Copy link
Powered by Social Snap