துபாயில் 4 நாட்கள் 80% வரை மெகா தள்ளுபடி விற்பனை.!

4 days mega sale upto 80 off in dubai

அமீரகத்தின் தேசிய தினத்தன்று ஷாப்பிங் ஃபீஸ்டா (Shopping Fiesta) துபாயில் தொடங்க உள்ளது.

இந்த மெகா விற்பனையில் கான்செப்ட் பிக் பிராண்ட்ஸ் கார்னிவல் (CBBC) 300க்கும் மேற்பட்ட பிராண்டுகளை ஒரே கூரையின் கீழ் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிராண்டட் தயாரிப்புகளை 80% சதவீதம் தள்ளுபடி விற்பனையில் நீங்கள் வாங்கலாம்.

இந்த விற்பனையானது, டிசம்பர் 2 முதல் டிசம்பர் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம் (Dubai World Trade Centre) ஹால் 8-ல் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடக்கும்.

Steve Madden, Max Factor, Pablosky பிராண்டுகளுக்கு முக்கிய தள்ளுபடி உண்டு. மேலும், ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் ஒரு இலவச பரிசும் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா தள்ளுபடி விற்பனையில் ஆடைகள், நகைகள், அழகு சாதன பொருட்கள் மற்றும் ஆண்கள், பெண்கள், குழைந்தைகளுக்கான வாசனை திரவியங்கள் (Perfumes) மற்றும் பல பொருட்களை வாங்கலாம்.

Loading...