21.7 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

மிகப்பெரிய விற்பனைத் திருவிழாவிற்குத் தயாராகும் ஷார்ஜா – 100 க்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பு..!

Big Sale 2020

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரையில் மிகப்பெரிய விற்பனைத் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில், உலகமெங்கிலும் உள்ள 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன.

தி கிரேட் ஷாப்பிங் கேம்பைன் 2020 (The Great Shopping Campaign 2020) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விற்பனைத் திருவிழாவில் ஃபேஷன், உதிரி பாகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கும் 100 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இதுகுறித்துப் பேசிய ஷார்ஜா எக்ஸ்போ செண்டரின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மித்ஃபா (Saif Mohammed Al Midfa),” செப்டம்பர் மாதம் எக்ஸ்போ எலெக்ட்ரானிக்ஸ் கண்காட்சி சிறப்பாக நடந்ததைத் தொடர்ந்து அக்டோபரில் தி கிரேட் ஷாப்பிங் கேம்பைன் நடைபெற இருக்கிறது” என்றார்.

மக்களிடையே வரவேற்பைப் பெற்ற எக்ஸ்போ எலெக்ட்ரானிக்ஸ் விற்பனைத் திருவிழாவிற்கு 15,000 மக்கள் வருகை புரிந்ததாக Wam செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய இந்த கண்காட்சியின் திட்ட பங்குதாரர் ஜாக்கப் வர்கீஸ் (Jacob Varghese),” பல்வேறு வகையான வயதுடைய, ரசனைகள் கொண்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்த இருக்கின்றன” என்றார்.

கண்காட்சி மற்றும் மாநாடுகள் நடைபெறும் நேரங்களில் பெடரல் மற்றும் உள்ளூர் அரசு விதித்திருக்கும் கொரோனா விதிமுறைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருவதாக மித்ஃபா தெரிவித்தார்.



error: Alert: Content is protected !!