UAE Tamil Web

வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்திற்கும் 6 மாத காலத்திற்கு 50% தள்ளுபடி : கேரிஃபோர் வெளியிட்ட அதிரடி ஆஃபர்..!

Carrefour

காய்கறிகள், உணவுப் பொருட்கள், சமையலறை சாமான்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ஆறுமாத காலத்திற்கு 50 சதவிதம் வரையிலும் வாராந்திர தள்ளுபடி அளிக்க இருக்கிறது கேரிஃபோர். இட்ஸ் பிக் டீல் (It’s a Big Deal) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டமானது ஜூலை 2021 வரையிலும் நீடிக்க இருக்கிறது.

- Advertisment -

மஜீத் அல் ஃபுட்டைம் ரீடெய்ல் -லில் உள்ள கேரிஃபோர் UAE-ன் மேலாளர் பிலிப் பெகுலிஹன் இதுகுறித்துப் பேசுகையில்,” சமூகத்துடன் இணைந்திருக்கும் எங்களுக்கு கொரோனா, மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி நன்றாகவே தெரியும். அதனாலேயே இட்ஸ் பிக் டீல் எனப்படும் இப்பிராந்தியத்தின் மிகப்பெரிய தள்ளுபடியை நாங்கள் அளிக்க இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நீங்கள் கேரிஃபோருக்கு வருகையில் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்” என்றார்.

ஆன்லைன் அல்லது அமீரகத்தில் உள்ள எந்த கேரிஃபோர் ஸ்டோர் மூலமாகவும் நீங்கள் 50 சதவீதம் வரையிலும் தள்ளுபடியைப் பெறலாம். குறிப்பாக வாராந்திர சலுகைகளில் உங்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கலாம்.