காதலர் தினம் நெருங்கிவிட்டது. அன்புக்குரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள் பற்றிய பேச்சுகள் கேட்கத் துவங்கிவிட்டன. இவர்களைக் குறிவைத்தே புதிய பரிசுப் புதிர் ஒன்றினை அறிவித்துள்ளது அல் ஃபுத்தைம் மாலில் உள்ள கேரிஃபோர்.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ள கேரிஃபோர், வலைப்பின்னலுக்கு நடுவே உள்ள இதயத்தை அடையும் வழியைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 100 திர்ஹம்ஸ் மதிப்புள்ள பரிசு அட்டை வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள A,B மற்றும் C ஆகிய வழிகளில் எது இதயத்தை சென்றடையும் வழி என்பதனைத் தேர்வு செய்து அந்தப் பதிவில் கமெண்ட் இடுவதுதான்.
Can you tell us which route leads directly to the center of this love heart? Reply with your best guess for a chance to win a 100 AED gift card! #ValentinesDay #MoreForYou #GreatMoments @MajidAlFuttaim pic.twitter.com/KojLHOTbgZ
— @CarrefourUAE (@CarrefourUAE) February 8, 2021
உங்களது பதிலை மேற்கண்ட பதிவில் சென்று தெரிவியுங்கள். வாழ்த்துகள்.