fbpx
UAE Tamil Web

துபாய்: 90 சதவிகிதம் வரையில் தள்ளுபடி – 12 மணி நேரங்களுக்கு மட்டுமே..!

ShoppingMall

துபாய் விற்பனைத் திருவிழா (Dubai Shopping Festivals) விமர்சையாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் துபாயின் முக்கிய ஷாப்பிங் மால்களில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையில் 90 சதவிகித அதிரடி தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

இந்த வருடத்தின் கடைசி சூப்பர் தள்ளுபடித் திருவிழாவான இதில் 90 சதவிகித தள்ளுபடியில் பொருட்களை மஜீத் அல் ஃபுட்டைம் மால்களால் (Majid Al Futtaim Malls) நிர்வகிக்கப்படும் ஷாப்பிங் மால்களில் வாங்கலாம்.

இந்த ஒருநாள் அதிரடி தள்ளுபடி விற்பனையில் எலெக்ட்ரானிக் மற்றும் ஃபேஷன் பொருட்கள், குழந்தைகளுக்கான உடைகளை 25 – 90 சதவிகித தள்ளுபடியில் வாங்கலாம்.

ஒருநாள் தள்ளுபடி திருவிழா நடைபெறும் இடங்கள் 

  • மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates)
  • சிட்டி செண்டர் மிர்திஃப் (City Centre Mirdif)
  • சிட்டி செண்டர் தேரா (City Centre Deira)
  • சிட்டி செண்டர் மேசெம் (City Centre Me’aisem)
  • மை சிட்டி செண்டர் அல் பர்ஷா (My City Centre Al Barsha)
  • சிட்டி செண்டர் அல் ஷிண்டாகா (City Centre Al Shindagha)

26 வது துபாய் தள்ளுபடித் திருவிழா ஜனவரி 30, 2021 ஆம் ஆண்டு வரையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.