UAE Tamil Web

துபாய்: ஆடைகள், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு 90% வரையில் தள்ளுபடி – ஒருநாள் அதிரடி ஆஃபர்..!

offer

துபாயில் ஒருநாள் சிறப்பு தள்ளுபடி கொண்டாட்டம் இன்று (ஜூலை 19) நடைபெற இருக்கிறது. துபாய் சம்மர் சர்ப்ரைஸ் நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய அதிரடி ஆஃபர் அளிக்கப்படும். ஈத் அல் அத்ஹாவிற்கு இன்னும் ஷாப்பிங் செய்யவில்லை என்றால் இன்றைய நாளினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் -ல் பங்கேற்கும் துபாய் முழுவதிலும் உள்ள மால்கள் மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு இன்று 90% தள்ளுபடி அளிக்கப்பட இருக்கிறது.

அழகுசாதனப் பொருட்கள், புதிய கேட்ஜட்கள் என மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க நினைக்கும் சரியான நேரத்தில் இந்த அதிரடி தள்ளுபடி அறிவிக்கபட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ரிவோலி, அல் முகலாத் பெர்ஃபியூம், ஆல்டோ, காண்ட், எல்.சி வைகிகி, கார்ட்டர்ஸ், ஜியோர்டானோ, ஏஸ், ஆப்டி விஷன், ரிச்சுவல்ஸ், திங்க் கிச்சன், ரேங்க்லர், யுனைடெட் ஃபர்னிச்சர், தட் (THAT), ஸ்டீவ் மேடன், ஹோம் சென்டர், யடீம் ஆப்டிக்ஸ், டூன் லண்டன் உட்பட பல பிராண்டுகளை நீங்கள் இங்கே தள்ளுபடியில் பெறலாம்.

offer
0 Shares
Share via
Copy link