UAE Tamil Web

துபாயின் பிரம்மாண்ட விற்பனைத் திருவிழா துவக்கம் : ஷாப்பிங் பிரியர்கள் உற்சாகம்..!

SHOPPING OFFER

ஒவ்வொரு கோடைக்காலத்திலும் துபாயில் நடைபெறும் பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழாவான துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) இந்தாண்டு ஜூலை 1 ஆம் தேதிமுதல் செப்டம்பர் 4 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கிறது. துவங்க இருக்கும் 24 வது DSS திருவிழாவை முன்னிட்டு வான வேடிக்கைகள், உணவுத் திருவிழா, தள்ளுபடிக் கொண்டாட்டம் மற்றும் பல ப்ரோமிஷன்கள் நடைபெற இருக்கின்றன.

துபாய் திருவிழா மற்றும் சில்லறை வர்த்தக ஸ்தாபனம் (DFRE) இந்த விற்பனைத் திருவிழாவை ஒருங்கிணைக்கிறது. துவக்க நாளான ஜூலை 1 ஆம் தேதி புர்ஜ் கலீஃபாவில் வான வேடிக்கை, வீடியோ திரையிடல் மற்றும் ஃபவுண்டைன் ஆகியவை நிகழ இருக்கிறது. போலவே, தி பாய்ண்டியில் (The Pointe) பாம் ஃபவுண்டைனும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் இமேஜின் ஷோவும் நடைபெற இருக்கின்றன.

DSS ஷேர் மில்லியனர், டெய்லி சர்ப்ரைஸ் போன்ற ப்ரோமோஷன்களும், சாப்பாட்டுப் பிரியர்களுக்கான உணவுத் திருவிழாவும் குடும்பங்கள் ஒன்றாக திரை அனுபவத்தைக் கான சம்மர் ஆர்ட் ப்ரொஜெக்ட் (Summer Art Project) ஆகியவையும் நடைபெற இருக்கின்றன.

இதேபோல பல அட்டகாசமான ரேஃபிள்கள், துபாயின் ஹோட்டல்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சிறந்த தள்ளுபடி என பல சலுகைகளை இந்த ஆண்டு DSS வழங்க இருக்கிறது.

உலகின் பாதுகாப்பான நகரம் என்ற துபாயின் பெருமையை தொடர்ந்து தக்கவைக்கும் நோக்கோடு இந்தத் திருவிழாவின் போது அரசு வகுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையான முறையில் கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHOPPING OFFER
0 Shares
Share via
Copy link