UAE Tamil Web

துபாய் விற்பனைத் திருவிழாவின் (DSF) இறுதிகட்ட ஆஃபர் : 300 பிராண்டுகளுக்கு 90 சதவிகிதம் வரையில் தள்ளுபடி..!

Shopping

துபாய் முழுவதிலும் உள்ள 1000 விற்பனை நிலையங்களில் ஜனவரி 28 முதல் 30 ஆம் தேதிவரையில் 300 பிராண்டுகளைச் சேர்ந்த பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடி அளிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருமாத காலம் நீடித்த இந்த விற்பனைத் திருவிழாவின் கடைசி நாட்களில் மக்களுக்கு அதிரடி தள்ளுபடியில் பொருட்களை வழங்கும் நோக்கத்தோடு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அபெர்கிராம்பி & ஃபிட்ச், அமெரிக்கன் ஈகிள் அவுட்ஃபிட்டர்ஸ், பால்மைன், பனானா  ரிபப்ளிக், கரோலினா ஹெர்ரெரா, சேனல், டீசல், எர்மெனெகில்டோ ஜெங்கா, ஹோலிஸ்டர் கோ, ஹோம்பாக்ஸ், இன்டீரியர்ஸ், கென்சோ, லா சென்சா பிளஸ் ரீபோக், ரிவர் ஐலேண்ட், ஸ்காட்ச் & சோடா, ரேங்லர் மற்றும் ஃபேஸ் ஷாப் ஆகிய பிராண்டுகள் இந்த மாபெரும் தள்ளுபடித் திருவிழாவில் களம் காண்கின்றன.

குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இந்த மூன்று நாட்களும் வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன், பொம்மைகள் போன்ற ஏராளமான பொருட்களுக்கு 25 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடியைப் பெறலாம்.