UAE Tamil Web

துபாய்: 200 திர்ஹம்ஸ்க்கு ஷாப்பிங் செய்தால் 10 ஆயிரம் திர்ஹம்ஸ் பரிசு வெல்ல அரிய வாய்ப்பு..!

Dubai Modesh Draw

துபாயில் உள்ள ஷாப்பிங் பிரியர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தினந்தோறும் 10 ஆயிரம் திர்ஹம்ஸ் வெல்லும் குலுக்கல் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாய் சம்மர் சர்ஃப்ரைஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மொதேஷ் டெய்லி ஜாக்பாட் (Modesh Daily Jackpot) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த குலுக்கலில் நீங்கள் பங்கேற்க வேண்டுமானால் பாம் ஜுமேய்ராவில் அமைந்துள்ள இப்னு பத்தூதா மால் அல்லது நக்கீல் மாலில் 200 திர்ஹம்ஸ்க்கு நீங்கள் ஷாப்பிங் செய்யவேண்டும்.

மால்களில் அமைந்துள்ள வாடிக்கையாளர் சேவை வழங்கும் இடத்தில் (customer service desk) உங்களுடைய ரசீதை ஸ்கேன் செய்தால் போதும் 10 ஆயிரம் திர்ஹம்ஸ் வெல்வதற்கான குலுக்கலில் நீங்கள் நுழைவீர்கள். ஆகஸ்டு 7 ஆம் தேதிவரையில் இந்த அதிரடி திட்டம் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் நடைபெறும் காலத்தில் வழங்கப்பட இருக்கும் 12.5 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையில் இந்த ஜாக்பாட்டும் ஒன்றாகும்.

துபாய் மாஸ்கோட் மொதேஷ் என்பதிலிருந்தே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai Modesh Draw
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap