2020-ன் முதல் DSF ஃபிளாஷ் விற்பனை! 90% தள்ளுபடி அறிவிப்பு.!

DSF OFFER

முன்பு அறிவித்தபடி துபாய் ஷாப்பிங் விழா (DUBAI SHOPPING FESTIVAL) கொண்டாட்டங்களின் ஆச்சரியங்கள் 2020 புது வருடத்துடன் புத்துணர்வாக தொடங்கி உள்ளன.

இந்த மனதை கவரும் விற்பனை ஜனவரி 2 முதல் 26 வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த விற்பனையில் கலந்து கொள்ளும் “பிராண்டுகள்” ஒரு நாளைக்கு ஒரு இடத்தில் மட்டுமே தள்ளுபடிகளையும் மற்றும் விளம்பரங்களையும் வழங்குகின்றன. காலை 10 மணிக்கு தொடங்கி தள்ளுபடி பொருட்கள் விற்று முடியும் வரை இதன் நேரம் நீடிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு தள்ளுபடி டீலும் (DEAL) நேரலை செய்யப்படும் நாளிலிருந்து 24 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே வெளிப்படுத்தப்படும். எனவே செய்தி அல்லது DSF சமூக ஊடக போஸ்ட்களை பின்தொடர்பவர்கள் மட்டுமே சிறந்த டீல்களை வெல்ல முடியும்.

இந்த வாரம், அதாவது ஜனவரி 2 ஆம் தேதி சிட்டி சென்டர் டேராவில் (CITY CENTER DEIRA) அனைத்து ஆபரணங்களுக்கும் நம்பமுடியாத அளவு 90 சதவீத தள்ளுபடியுடன் தனது தள்ளுபடியை துவங்க உள்ளது என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் DSF நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனையானது காலை 10 மணிக்கு தொடங்கி, பொருட்கள் விற்று முடியும் வரை நீடிக்கும்.

Loading...