80% அதிரடி தள்ளுபடி.! துபாயில் CBBC-ன் மாபெரும் கண்காட்சி.!

CBBC offer

அட்டகாசமான ஷாப்பிங் அனுபவத்திற்கும் அதிரடி சலுகைகளுக்கும் பிரசித்தி பெற்ற நகரம் துபாய் என்பதை அனைவரும் அறிவோம்.

அப்படிப்பட்ட டீல்களின் பட்டியலில் இடம்பெறுகிறது இந்த பிரமாண்ட தள்ளுபடி. அதாவது துபாய் உலக வர்த்தக மையத்திலுள்ள(Dubai World Trade Centre) ஷேக் ரஷீத் ஹாலில், ஒரே கூரையின் கீழ் 300 க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் CBCC-யின் ஒரு கடையின் கண்காட்சியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விற்பனை வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு பிடித்த பிராண்டுகளில் நம்பமுடியாத தள்ளுபடியைப் பெற ஒரு பெரிய வாய்ப்பை வழங்கும். CBBC கடையின் இந்த மாபெரும் கண்காட்சி கதவுகள் பொதுமக்களுக்காக மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை- காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

இந்த நான்கு நாள் மெகா நிகழ்வின் போது பங்கேற்கும் அனைத்து பிராண்டுகளிலும் வாடிக்கையாளர்கள் 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். அதுமட்டுமின்றி CBBC பல்வேறு சிறந்த பிராண்டுகளின் கடிகாரங்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கைப்பைகள், சன்கிளாஸ்கள் மற்றும் காலணிகள் போன்ற பல்வேறு விஷயங்களை விற்பனை செய்கிறது. இதில்,

 • மாசிமோ தட்டி (Massimo Dutti)
 • லா சென்சா (La Senza)
 • சூட் பிளாங்கோ (Suite Blanco)
 • பில்லாபோங் (Billabong)
 • கெஸ் (Guess)
 • வெர்சேஸ் (Versace)
 • ஹ்யூகோ பாஸ் டீசல் (Hugo Boss Diesel)
 • தியரி முக்லர் (Thierry Mugler)
 • ஜீன்-பால் கோல்டியர் (Jean-Paul Gaultier)
 • ரேமண்ட் வெயில் (Raymond Weil)
 • டெட் லாப்பிடஸ் (Ted Lapidus)
 • நினா ரிச்சி (Nina Ricci)
 • அய்னர் (Aigner)
 • டி.கே.என்.ஒய் (DKNY)
 • சோபார்ட் (Chopard)
 • வாலண்டினோ (Valentino)
 • டெட் பேக்கர் (Ted Baker)
 • பி.சி.பி.ஜி (BCBG)
 • தி கூப்பிள்ஸ் (The Kooples)
 • மேஜே (Maje)
 • வின்சி காமுடோ (Vinci Camuto)
 • சாண்ட்ரோ (Sandro)
 • அடிடாஸ் (Adidas)
 • நைக் (Nike)

மற்றும் இன்னும் பல பிராண்டுகள் அடங்கும்.

இந்த ஆச்சரியமான சலுகைகளுக்கு மேல் அதிகமாக, அனைத்து கமர்ஷியல் வங்கி ஆஃப் துபாய் கார்டு வைத்திருப்பவர்கள், 500 திர்ஹம்ஸ் மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்கும்போது ஒரு அரேபிய நைட்ஸ் வாசனை திரவிய பரிசை இலவசமாகப் பெறுவார்கள்.

இந்த தள்ளுபடிக்கான நுழைவு கட்டணம் இலவசம். மேலும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இலவச பரிசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...