fbpx
UAE Tamil Web

250 பிராண்டுகள்; 80% வரை தள்ளுபடி – துவங்குகிறது CBBC பிங்க் வீக்கெண்ட் சேல் 2020..!

CBBC Pink Weekend 2020 sale

துபாய் உலக வர்த்தக மையத்தில் (DWTC) நவம்பர் 24 ஆம் தேதி முதல் CBBC பிங்க் வீக்கெண்ட் சேல் 2020 (CBBC Pink Weekend Sale 2020) துவங்க இருக்கிறது.

250 உலகாளவிய பிராண்டுகளுக்கு இங்கே 80 சதவிகிதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்களது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பொருட்களை மிகவும் குறைந்த விலையில் அளிப்பதே எங்களது நோக்கமாகும். பணத்திற்கு ஏற்றபடி, தரமான பொருட்களை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை அளிக்க இருக்கிறோம்” என CBBC யின் தலைமை நிர்வாக இயக்குனர் விஜய் சமயானி தெரிவித்தார்.

சமூக விலகலைப் பின்பற்றுதல், இடங்களை அவ்வப்போது சுத்திகரிப்பு செய்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கவனமான முறையில் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லபாங் (Billabong), டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger), ரீபோக் (Reebok), ஐக்னர் (Aigner), ஸ்ப்லாஷ் (Splash), அடிடாஸ் (Adidas), டெசிகுவல் (Desigual), லாகோஸ்டே (Lacoste), நைக் (Nike), டீசல் (Diesel), பாஸ் (Boss), மேக்ஸ்ஃபேக்டர் (Maxfactor), செருட்டி (Cerruti), போலீஸ் (Police), ட்ரூஸார்டி (Trussardi), ஜியோக்ஸ் (Geox) மற்றும் இன்னும் பிற உலகளாவிய பிராண்டுகள் இதில் பங்கேற்கின்றன.

DWTC யின் 5 மற்றும் 6 வது ஹால்களில் காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையில் இந்த விற்பனைத் திருவிழா நடைபெறுகிறது. நாளை (நவம்பர் 24) துவங்கும் இந்தத் திருவிழா நவம்பர் 28 ஆம் தேதிவரையில் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.