74வது இந்திய குடியரசு தினத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று டிச.26, ஐக்கிய அரபு அமீரகத்தினை மையமாக கொண்டு இயங்கும் மிகப்பெரிய லுலு குரூப் இன்டர்நேஷனல் நடத்தும் ‘India Utsav’ 17வது பதிப்பை, ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான இந்திய தூதர் சுஞ்சய் சுதிர் தொடங்கி வைத்தார்.
GCCல் இருக்கும் லுலு ஹைபர் மார்க்கெட்டில் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, 2,000க்கும் மேற்பட்ட இந்திய தயாரிப்புகளில் மிகப்பெரிய தள்ளுபடிகளிருக்கும். அவ்வப்போது, ஸ்டார் பிரபலங்களின் வருகை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த நிகழ்வின் மூலம், மார்ச் 18 வரை லுலு ஸ்டோர்களில் 100 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளருக்கு 60 நபர்களுக்கு 3 கிலோ தங்கப் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. நீங்கள் ஆன்லைன் மூலமும் லுலு மார்க்கெட்டில் பர்சேஸ் செய்ய முடியும். இதன் மூலம், ஒவ்வொரு வெற்றியாளரும் 50 கிராம் தங்கம் பெற முடியும்.
மேலும் அபுதாபி நகரில் உள்ள அல் வஹ்தா மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் சுதிர் தனது உரையில், லுலு India Utsav இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான அன்பான உறவுகளை ஷாப்பிங், உணவு வகைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் அழகாக எடுத்து செல்கிறது என்றார்.
இந்தியாவின் 74 வது குடியரசு தினத்தை கொண்டாடும் நேரத்தில், நம்பிக்கையின் தொடக்கத்தில் இருக்கிறோம். மேலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடையே இருக்கும் புதிய காட்சிகளைத் உருவாக்கும் முயற்சியில் இருக்கும் லுலு குழுமம் போன்ற பலரை நாங்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
லுலு குரூப் இன்டர்நேஷனல் தலைமை நிர்வாக அதிகாரி சைஃபி ருபாவாலா பேசும்போது, இந்த விழா எங்களின் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று. இந்தியாவிற்கும், அமீரகத்திற்கும் இடையே தொழில் பாலமாக லுலு தனது பணியை சரியாக செய்து வருவதாக நம்புகிறோம். இந்தியாவில் எங்களது முதலீடுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மேலும் UAE பிராண்டினை இந்திய மார்கெட்டினுள் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த நிகழ்வின் போது, இந்தியாவில் உள்ள லுலுவின் அலுவலகம் மூலம் 2,000க்கும் மேற்பட்ட இந்திய தயாரிப்புகள் வளைகுடா பகுதிக்கு பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வு UAE மற்றும் GCCஇல் உள்ள அனைத்து லுலு ஹைப்பர் மார்க்கெட்களிலும் அரிசி, தானியங்கள், மசாலாப் பொருட்கள், இறைச்சிகள், ரெடிமேட் உணவுகள், மளிகைப் பொருட்கள், அழகுசாதனங்கள் போன்றவற்றில் தள்ளுபடி இருக்கும். இந்த அனைத்து சலுகைகளும் கடையிலும் ஆன்லைனிலும் கிடைக்கும்.
பிரபலங்களின் வருகையில் முதல் ஆளாக, இந்திய நடிகை மஞ்சு வாரியர் சனிக்கிழமை அல் வஹ்தா மாலுக்கு வருகை தர இருக்கிறார். சர்வதேச திணை ஆண்டின் ஒரு பகுதியாக பாரம்பரிய நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்கள் மற்றும் பிற மால்களில் குழந்தைகளுக்கான போட்டிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.