UAE Tamil Web

1 திர்ஹம்ஸ் முதல் மளிகை சமான்கள் : அமீரகம் மற்றும் சவூதியில் நூன் நிறுவனம் வெளியிட்ட அதிரடி ஆஃபர்..!

noon

பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான நூன்.காம் (noon.com) அதிரடி தள்ளுபடி ஆஃபரை அறிவித்துள்ளது. இதன்மூலம் மளிகைச் சாமான்களை 1 திர்ஹம்ஸ் முதல் உங்களால் பெறமுடியும். அமீரகம் மற்றும் சவூதியிலும் இந்த ஆஃபர் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.

ஜூலை 28 துவங்கிய இந்த தள்ளுபடி காலம் ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரையில் நீடிக்கிறது. மளிகைப் பொருட்கள் மட்டுமல்லாது வீட்டு உபயோகப் பொருட்களையும் இந்த தள்ளுபடிக் காலத்தில் உங்களால் வாங்கமுடியும்.

ஆரோக்கிய உணர்வுள்ள வாடிக்கையாளர்கள் தேங்காய் தண்ணீரை வெறும் 6.4 திர்ஹம்சிற்கும், அரை கிலோ தர்பூசணி துண்டுகளை 4.9 திர்ஹம்சிற்கும் ரூட் ஹெல்த் நிறுவனத்தின் ஸ்மூதி ஓட்ஸ்-ஐ 30 % தள்ளுபடியுடன் 14.35 திர்ஹம்சிற்கும் வாங்கலாம்.

சவூதியின் ஜித்தா மற்றும் ரியாத்தில் வசிப்பவர்கள் 36.5 ரியாலுக்கு 5 கிலோ பாஸ்மதி அரிசியை வாங்கலாம். 1 கிலோ சிவப்பு வெங்காயத்தினை 50% தள்ளுபடியில் 1.45 ரியாலுக்கும் ரஃபெலோ சாக்லேட்டை 12.9 ரியாலுக்கும் வாங்கலாம்.

நீங்கள் வாங்கும் பல பொருட்களுக்கு ஆர்டர் செய்த அன்றே டெலிவரி பெறும் வசதியை நூன் உங்களுக்கு அளிக்கிறது. அடுத்தநாள் டெலிவரியை தேர்ந்தெடுப்பவர்கள் 30 திர்ஹம்ஸ் தொகைக்கு கூடுதலாக ஷாப்பிங் செய்தால் டெலிவரி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு அத்தியாவசிய பொருட்கள், பழங்கள், காய்கறிகள், ரொட்டி, பேக்கரி, உறைந்த உணவு, இறைச்சி, பால், குழந்தைகளுக்கான உணவு என பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடியை நூன் அறிவித்திருக்கிறது.

அமீரகம் மற்றும் சவூதியில் உள்ளவர்கள் நூன் அப்ளிகேஷனில் சென்று உங்களுக்குத் தேவையான பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

noon
4 Shares
Share via
Copy link