துபாயில் 12 மணிநேர மெகா விற்பனை.! 90% தள்ளுபடி அறிவிப்பு.!

FIREWORKS

துபாய் ஷாப்பிங் திருவிழாவின் (DSF) 25வது பதிப்பு வரும் டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் டவுன்டவுன் (Downtown) துபாய், புர்ஜ் பூங்காவில் இரண்டு நாள் கிராண்ட் ஓபனிங் நிகழ்வோடு தொடங்க உள்ளது.

இந்த துபாய் ஷாப்பிங் திருவிழா 12 மணி நேர விற்பனையுடன் தொடங்க உள்ளது. இதில் மஜித் அல் ஃபுட்டயிம் (Majid Al Futtaim), 6 மால்களிலும் வரும் டிசம்பர் 26 வியாழக்கிழமை சுமார் 25 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனை வழங்க உள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனை மதியம் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற உள்ளது.

மால் செல்வோர், ஸ்டோர்களில் 300 திர்கம் மேல் செலவு செய்யும் பட்சத்தில், 25 பேரில் ஒருவர் 10,000 திர்கம் மதிப்புள்ள MAF பரிசுகளை வெல்லலாம். இதில் மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் Me’aisem, மை சிட்டி சென்டர் அல் பார்ஷா மற்றும் சிட்டி சென்டர் அல் ஷிண்டாகா (Shindagha) ஆகியவை அடங்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த ஷாப்பிங் திருவிழா பிப்ரவரி 1, 2020 வரை, 38 நாட்களுக்கு இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...