துபாய் மாலில் மெகா தள்ளுபடி விற்பனை – 90% வரை அதிரடி தள்ளுபடி..!

Mega sale at The Dubai Mall: Get up to 90% discount

வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை, உங்களுக்கு பிடித்த அனைத்து பிராண்டுகளுக்கும், துபாய் மாலில் உள்ள நூற்றுக்கணக்கான ரீடைல் (Retail) கடைகளிலும் 25 முதல் 90 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியுடன் ஷாப்பிங் செய்யுங்கள். மேலும், இந்த 3 நாள் சூப்பர் விற்பனையின் போது நீங்கள் வாங்கும் எமார் (Emaar) பரிசு அட்டைக்கு கூடுதலாக 10 சதவீத டாப்-அப் வழங்கப்படுகிறது.

சுமார் 1,350 க்கும் மேற்பட்ட ரீடைல் கடைகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் குளிர்பான விற்பனை நிலையங்களுடன், துபாய் மால் இந்த வார இறுதியில் நம்பமுடியாத பல சலுகைகளுடன் உங்கள் முழு குடும்பத்தினருக்கும் இன்ப விருந்தளிக்க காத்திருக்கிறது.

இந்த தள்ளுபடி விற்பனையின் போது துபாய் மால் அதிகாலை 1 மணி வரை இயங்கும். மேலும், அதிகாலை 2 மணி வரை விருந்தினர்களை வரவேற்க உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

என்ன      : 3 நாள் அதிரடி தள்ளுபடி விற்பனை
எங்கே     : துபாய் மால்
எப்போது : வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை (வியாழன் முதல் சனி வரை)
நேரம்      : Retail விற்பனை – காலை 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை; உணவு மற்றும் பான விற்பனை – காலை 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை.

(விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்)