ரமலான் 2020: அமீரகத்தில் 5,000 உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு 60% வரை தள்ளுபடி.!

ramadan 2020

பொருளாதார அமைச்சகத்தின் புதிய முயற்சியின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 5,000 உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் 25 முதல் 60 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலைக் குறைப்பு 2020 மார்ச் மாதம் முழுவதும் நடைமுறைக்கு வரும். துபாயில் நடைபெற்ற 15 வது வளைகுடா நுகர்வோர் பாதுகாப்பு தின மாநாட்டின் போது அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

பொருளாதார அமைச்சகத்தின் போட்டித்திறன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் டாக்டர் ஹாஷிம் அல் நுவைமி ஒரு செய்திக்குறிப்பில், “அமைச்சகம் இந்த முயற்சியைச் செயல்படுத்த முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது. மேலும் இந்த விலைக் குறைப்புகளில் அடிப்படை பொருட்கள், விலையின் நிலைத்தன்மையை ஆதரிப்பது மற்றும் நுகர்வோருக்கு அவர்களின் தேவைகளை குறைந்த விலையில் பெற பல வாய்ப்புகளை வழங்குவது ஆகியவை அடங்கும்” என்று சுட்டிக்காட்டினார்.

‘நுகர்வோருக்கு பாதுகாப்பான மின்னணு ஷாப்பிங் அனுபவத்தை நோக்கி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற இந்த மாநாட்டின் ஒரு பக்கத்தில், அல் நுயிமி மேலும் கூறுகையில், “இந்த முயற்சியை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, புனித ரமழான் மாதத்திற்கு முன்னும் பின்னும் பெரிய தள்ளுபடி பிரச்சாரங்களுக்கான (முந்தைய ரமலான் பருவத்தை விட அதிகமான விகிதத்தில்) தயாரிப்பு தொடங்கும்” என்றார்.

மேலும் இ-காமர்ஸ் துறையில் நுகர்வோர் உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய வணிக முயற்சிகள் குறித்து விவாதிக்க நுகர்வோர் பாதுகாப்புக்கான உச்ச குழு, துபாயில் ஒரு கூட்டத்தை நடத்தும் என்றும் அவர் கூறினார்.

இதனுடன் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தின் சார்பாக Union Coop நிறுவனத்தின், மகிழ்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் துறை இயக்குநர் டாக்டர் சுஹைல் அல் பஸ்தாக்கி கூறுகையில், “எங்கள் நிறுவனம் Coop பிராண்டின் 300 க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளடக்கிய தள்ளுபடிகளை மார்ச் மாதத்தில் (30 சதவீதம் வரை) 15 வது வளைகுடா நுகர்வோர் பாதுகாப்பு நாள் மற்றும் கூட்டுறவு ஷாப்பிங் விழாவுடன் இணைந்து தொடங்கும்” என்றார்.

Loading...