இஸ்லாமிய நாட்காட்டியின்படி, புனித மாதம் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக முஸ்லீம் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதத்தில் மளிகை சாமான்களுக்கு அமீரகத்தில் மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில்லறை வணிக நிறுவனமான கேரிஃபோர் தனது ரமலான் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக 6,000க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை அறிமுகப்படுத்தியுள்ளதாக புதன்கிழமை(டிச.22) அறிவித்தது.
இந்த தள்ளுபடிகள் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும். மேலும் மொத்தமாக வாங்குபவர்களுக்கு தள்ளுபடிகள், சர்வதேச பிராண்டுகளின் பிரத்தியேக சலுகைகள் மற்றும் அதன் சொந்த நிறுவனத்தின் தனிப்பட்ட பொருள்களுக்கு தள்ளுபடிகள் ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், உயர் தரத்தில் உள்ள முன்னணி பிராண்டுகளுடன் ஒப்பிடும் போது, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த பொருட்களின் தரம் சராசரியாக 27 சதவீதம் கூடுதல் மதிப்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக, சில்லறை விற்பனையாளர் தன்னுடைய இணைப்பில் இருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச சப்ளையர்களிடம் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார்.
இதனால், புனித மாதம் முழுவதும் எவ்வளவு அதிகமாக தேவையைப் அதிகரித்தாலும் அதனை பூர்த்தி செய்ய, ஸ்டாக்கினை 15 சதவிகிதம் அதிகரிக்கச் செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் எங்கள் communityஐ தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் பொருள்களின் ஸ்டாக் தொடர்ந்து சேமிக்கப்படுவதையும், விலை நிலையாக இருப்பதையும் உறுதி செய்து தருகின்றனர். எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் உடன் இணைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை மேம்படுத்துவதற்காக அத்தியாவசிய பொருட்கள் நிரப்பப்பட்ட ரமலான் பெட்டிகளை விநியோகிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என்றார் மஜித் அல் இல் உள்ள Carrefourன் வர்த்தக மற்றும் செயல்பாட்டுத் தலைவர் Christophe Orcet கூறினார்.
Carrefour அண்டை பண்ணைகளில் இருந்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் மீது 30 சதவீதம் வரை விலை குறைப்புகளுடன் ‘Emirati Fresh Festival’ நடத்துகிறது குறிப்பிடத்தக்கது.