UAE Tamil Web

ஷார்ஜா: நாளை துவங்க இருக்கும் பிரம்மாண்ட விற்பனைத் திருவிழா..!

shopping

நாளை ஷார்ஜா சம்மர் ப்ரோமோஷன் என்னும் பிரம்மாண்ட விற்பனைத் திருவிழா துவங்க இருக்கிறது. ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில்துறைக்கான கூட்டமைப்பு (SCCI) இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க இருக்கிறது.

விருந்தினர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை கவரும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை SCCI முன்னெடுத்துள்ளது. விற்பனை திருவிழா மட்டுமல்லாமல் பல புத்துணர்வு அளிக்கக்கூடிய செயல்பாடுகள் இந்த ஷார்ஜா சம்மர் ப்ரோமோஷனில் நடைபெற இருக்கின்றன.

இந்த வருடத்திற்கான ஸ்லோகமாக ஷார்ஜா சம்மர் ஷாப்பிங் ப்ரைசஸ் ஃபன் (Sharjah Summer Shopping Prizes Fun) என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்கும் மால்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான பொருட்களுக்கென சரியான தள்ளுபடியை அளிக்க இருக்கின்றன.

பரிசுகள் மற்றும் வெகுமதி கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவிருக்கிறது. சிட்டி செண்டர் அல் சாஹியா (City Center Al Zahia) போட்டிகள் மற்றும் பரிசுகளை வழங்க இருக்கிறது. இங்கே நீங்கள் 200 திர்ஹம்ஸ் செலவிட்டால் BMW X5 காரினை வெல்வதற்கான ரேபிள் டிராவில் நீங்கள் நுழைவீர்கள். அதுமட்டுமல்லாமல் ஈத் அல் அத்ஹா நேரத்தில் பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

shopping
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap