சிறப்பு வார விற்பனை: துபாய் மால்களில் 75% வரை தள்ளுபடி..!

DUBAI MALL

துபாய்: விழாக்காலம் தொடங்கி விட்டது. தள்ளுபடியும் ஆரம்பித்துவிட்டது. மனநிறைவோடு ஷாப்பிங் செய்ய மக்களுக்கு இந்த ஆண்டும் வாய்ப்பை அளிக்க தவறவில்லை, துபாய்.

இந்த பண்டிகை காலத்தின் இனிய நாட்களை நல்ல பரிசுகளோடும் அதிக தள்ளுபடிகளோடும் ஆரம்பம் செய்ய, துபாய் பெஸ்டிவல்ஸ் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) ஒரு பரிசு சீசன் ஆரம்பித்துள்ளது. இந்த பரிசு திருவிழாவில் வாடிக்கையாளர்கள் அதிகபட்ச தள்ளுபடி பெறலாம் (25% முதல் 75% தள்ளுபடி) என மெகா தள்ளுபடி அறிவித்துள்ளது.

இந்த பரிசு திருவிழா இன்று (DECEMBER 12 2019) தொடங்கி DECEMBER 14 2019 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் வசிப்பவர்கள் மற்றும் இந்நாட்டு பார்வையாளர்களின் மனதை கவருவதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.

DFRE யின் கருத்துப்படி, நகரத்தைச் சுற்றியுள்ள 1,500 க்கும் மேற்பட்ட கடைகள் இந்த மூன்று நாட்களுக்கு விளம்பரங்கள் செய்வதில் பங்கேற்கின்றன. இந்த திருவிழாவில் பேஷன், ஃபர்னிச்சர் கடைகள் முதல் அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரை அதிகபட்ச தள்ளுபடி பெறலாம்.

“அமீரகத்தில் வாழும் உலகளாவிய மக்கள், பண்டிகை சூழ்நிலையை அனுபவிக்கவும், விடுமுறைக்கு முன் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வேண்டிய பரிசை குறைந்த விலையில் வாங்குவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை இந்த பரிசு சீசன் பெற்று தருகின்றது.” என்று இந்த பரிசு சீசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது அல் கஜா (Ahmed Al Khajah) சுட்டிக்காட்டுகின்றார்.

Loading...