UAE Tamil Web

அமீரகத்தில் இருக்கும் தமிழரா நீங்க… இந்திய குடியரசு தினத்தில் செம ஆஃபரில் buffet… அட இந்திய சாப்பாடா?! மிஸ் பண்ணாம விசிட் அடிங்க இந்த டாப் 6 இந்திய உணவகங்களுக்கு!

அமீரகத்தில் இருக்கும் எல்லா தமிழ் பேசும் மக்களுக்கும் என்னத்தான் இந்த நாட்டின் மீது பாசம் எல்லாமே இருந்தாலும், தமிழ்நாட்டின் உணவினை அடிக்கடி மிஸ் செய்வதாகவே ஃபீல் செய்வார்கள். அப்படி நீங்களும் வருத்தப்பட்டால் கண்டிப்பா அமீரகத்தில் இருக்கும் இந்திய உணவகங்களில் டாப் 6 பட்டியல் உங்களுக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறோம். உங்களுக்கு பிடித்த உணவகங்களில் யம்மி இந்திய சாப்பாட்டை சாப்பிட்டு ஜாலி பண்ணுங்க.

Republic Adda Bar & Lounge:

Business bayல் உள்ள பிரபலமான உணவகம் இது. இந்தியாவில் இருக்கும் தெருவோர கடையின் டேஸ்ட்டினை அச்சு அசலாக எடுத்து வருவதில் கில்லாடி. இந்திய குடியரசு தினத்தையொட்டி, டுனா பெல், கீமா கச்சோரி, லாம்ப் சட்பட் கபாப், தேசி பிட்டர்பால்லென் மற்றும் பலவற்றைக் கொண்ட சிறப்பு உணவுகள் மெனுவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஜனவரி 26 அன்று சாப்பிட நேரடியாக வருவோருக்கு தங்கள் மொத்த பில்லில் 30 சதவீத தள்ளுபடியைப் பெறலாம்.

Purani Dilli:

இந்திய குடியரசு தினத்தன்று, Purani Dilliல் உள்ள சுவையான உணவுகளுடன் நாளை கொண்டாடுங்கள். மூவர்ண பனீர் ஷேஜாதி டிக்கா, மாலாய் கோஃப்தா, ஹரியாலி சப்ஜி, ராப்ரியுடன் கூடிய டிரிகோலர் ஜலேபி மற்றும் பலவகை உணவுகள் இந்த குடியரசு தினத்துக்காக மெனுவில் இணைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26, இரவு 7 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் இந்த Buffetல் ஒரு நபருக்கு 74 திர்ஹம்ஸ் மட்டுமே வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Rang Mahal:

துபாயில் உள்ள JW Marriott Marquisல் உள்ள பிரபலமான இந்திய உணவகம் தான் Rang Mahal. பாரம்பரியமான இந்திய உணவினை நீங்க சாப்பிட நினைத்தால் அதற்கு சரியான இடம் இது தான். ஒரு நபருக்கு 225 திர்ஹம்ஸ் என்ற விலையில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் என இரண்டுமே கிடைக்கும். மெனுவில் சிக்கன் துப்பா அல்லது காளான் & டோஃபு துப்பா, எராச்சி கப்பா, கஜர் ஹல்வா டார்ட் மற்றும் பல இருக்கிறாது. ஜனவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ஒரு விசிட்டப்போடுங்க மஜா தான்.

Yummy Dosa:

துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள Yummy dosa உணவகத்தில் இந்த குடியரசு தினத்துக்கு மூவர்ண தோசையை ட்ரை செய்து பாருங்க. குடியரசு தினத்துக்காக தயாரிக்கப்பட்ட மூவர்ண தோசை, பீட்சா தோசை, சீஸ் சில்லி தோசை மற்றும் சாதாரண சீஸ் தோசை ஆகிய மூன்று சுவைகளைக் கொண்டுள்ளது. இது இந்தியக் கொடியின் வண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜனவரி 26 அன்று கிடைக்கும் இதன் விலை 26 திர்ஹம்ஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bombay Bungalow:

நாளை இந்திய குடியரசு தினத்தைக் கொண்டாட, துபாயில் உள்ள ஜேபிஆரில் இடம்பெற்றுள்ள இந்திய உணவகமான Bombay Bungalowக்குச் செல்லுங்கள். அந்த இடத்தில் உணவருந்துபவர்கள் அனைவருக்கும் இனிப்பு, இந்தியக் கொடியின் கலரில் உருவாக்கப்பட்ட திரங்கா சீஸ், பாதாம், பிஸ்தா மற்றும் ரோஜா இதழ்கள் கொண்ட மூன்று வண்ண சீஸ்கேக்கில் அடைத்த குலாப் ஜாமூன் ஆகியவை கொடுக்கப்படும்.

Varq:

Taj Exotica Resort & Spaல் உள்ள இந்தியன் ரெஸ்டாரன்ட் Varq, சைவம் மற்றும் அசைவ மெனுவில் ஏகப்பட்ட வெரைட்டிகளை கொடுத்து விசிட்டர்களை கொள்ளையடித்து வைத்து இருக்கிறது. மேலும், இந்தியாவில் சாப்பிடும் அதே டேஸ்ட்டில் உணவுகளை கொடுப்பதில் டாப்பில் இருக்கும் varqல் அனைத்து மெனுவும் நிர்வாக செஃப் சோனுவின் ஐடியாவில் உருவாக்கப்பட்டது. ஜனவரி 26, வியாழன், மதியம் 12 மணி முதல் 3.30 மணி வரை மதிய உணவு மற்றும் மாலை 6 மணி முதல் 11.30 மணி வரை இரவு உணவு என இந்த buffetக்கு ஒரு நபருக்கு 225 திர்ஹம்ஸ் வாங்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap