UAE Tamil Web

சந்தோஷத்தில் எதிசலாட் வாடிக்கையாளர்கள் : அதிரடி ஆஃபர் அறிவிப்பு..!

Etisalat

துபாய் சம்மர் சர்ப்ரைஸ் நிகழ்வின் பார்ட்னரான எதிசலாட் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. இன்று துவங்கியுள்ள இந்த மாபெரும் தள்ளுபடிக் கொண்டாட்டத்தில் பொருட்களை வாங்கும் எதிசலாட் வாடிக்கையாளர்கள் 65 சதவீதம் வரையில் தள்ளுபடியை பெறலாம்.

500 திர்ஹம்ஸ்க்கும் அதிகமான விலைகொண்ட பிரபலமான பிராண்டுகளின் சாம்சங், ஹவாய், சியோமி, சோனி மற்றும் போஸ் போன்றவற்றிலிருந்து சமீபத்திய ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் டிவிகள் ஆகியவற்றை 24 மாதத்திற்குள் செலுத்தக்கூடிய வகையிலான ஸ்மார்ட் பே (Smartpay) ஆப்ஷன் மூலமாக வாங்குவோருக்கு தள்ளுபடி அளிக்கப்படும். ஆன்லைன் மூலமாக வாங்குவோருக்கு இலவச டோர் டெலிவரியும் உண்டு.

ஜூலை 1 முதல் செப்டம்பர் 4, 2021 வரை நடைபெறும் இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸ் விற்பனைக் கொண்டாட்டத்தில் எதிசலாட் வாடிக்கையாளர்கள் www.etisalat.ae, மை எதிசலாட் ஆப் (My Etisalat app) மற்றும் அமீரகம் முழுவதிலும் உள்ள எதிசலாட் சில்லறை வர்த்தகக் கடைகள் மூலமாக பொருட்களை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etisalat
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap