UAE Tamil Web

50 ஆயிரம் பொருட்கள்; 90 சதவீதம் வரையில் தள்ளுபடி – மெகா திட்டத்தை அறிவித்த ஹைப்பர்மார்கெட்..!

union coop

யூனியன் கோஆப்பரேட்டிவ் சொசைட்டி இந்த வருடம் முழுமைக்குமான பிரத்யேக தள்ளுபடித் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 50 ஆயிரம் பொருட்களுக்கு 90 சதவீதம் வரையில் தள்ளுபடி அளிக்க காத்திருக்கிறது அமீரகத்திலேயே பெரிய ஹைப்பர் மார்கெட்டான யூனியன் கூப்.

- Advertisment -

சமூக மக்களுக்கு நலன் விளைவிக்கும் வகையில் 174 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள தள்ளுபடியை இந்த ஹைப்பர் மார்கெட் அளிக்க இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய யூனியன் கோஆப்பரேட்டிவ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி காலித் ஹுமைத் பின் திபன் அல் ஃபலாசி (Khalid Humaid Bin Diban Al Falasi),” விவசாயிகள், நுகர்வோர், விற்பனையாளர்கள், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் ஆகிய அனைவரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டீல் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் கீழ் தேசிய பொருட்கள் மற்றும் நிறுவனங்களை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் ஆரோக்கியமான, இயற்கை சார்ந்த, உணவு மற்றும் பிற பொருட்களும் மிகப்பெரிய எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கின்றன. இதன்மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான சந்தையை கண்டடைய முடியும். மேலும் வருடம் முழுவதும் நீடிக்கும் இந்த ஆஃபர் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பொருட்களை உரிய நேரத்தில் பெற வழிவகுக்கும்” என்றார்.

அதேபோல, பொருட்கள் அனைத்தும் மிக அதிக அளவிலான எண்ணிக்கையில் விற்பனைக்கு வருவதால், மக்கள் அனைவரும் சுய மற்றும் சமூக பாதுகாப்போடு தங்களுக்கான பொருட்களை எளிதில் வாங்கிச்செல்லலாம் என அவர் தெரிவித்தார்.

பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. சிறந்த தேசிய பொருளாதார முன்மாதிரியை உருவாக்கவும் பிராந்தியத்தில் சிறந்ததான கோ-ஆப்பரேட்டிவ் மையம் என்ற நிலையை அடைவதே எங்களது நோக்கமாகும் என ஃபலாசி தெரிவித்தார்.