UAE Tamil Web

4 நாட்கள்; 70% வரையில் தள்ளுபடி : அமீரகத்தைக் கலக்க இருக்கும் அமேசான் நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்..!

Amazon

பிரபல இணைய வழி வர்த்தக நிறுவனமான அமேசான், அமீரகத்தில் எவரிதிங் ஃபார் யூ சேல் (Everything For You Sale) என்னும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. மார்ச் 25 – 28 வரையிலான தேதிகளில் இந்த தள்ளுபடிக் கொண்டாட்டம் நிகழ இருக்கிறது.

- Advertisment -

அமேசானின் பிரைம் வாடிக்கையாளர்களாக நீங்கள் இருந்தால் 24 ஆம் தேதியே காலை 11 மணிமுதல் இரவு 11 மணிவரையில் உங்களால் தள்ளுபடி விலையில் ஷாப்பிங் செய்ய முடியும்.

நீங்கள் பிரைம் வாடிக்கையாளர்கள் இல்லையெனில் 30 நாட்கள் இலவச பிரைம் மெம்பர்ஷிப்பைப் பயன்படுத்தலாம். அதன்பிறகு மாதம் 16 திர்ஹம்ஸ் அல்லது வருடத்திற்கு 140 திர்ஹம்ஸ் செலுத்தி உங்களது மெம்பர்ஷிப்பை நீட்டித்துக்கொள்ளலாம்.

எலெக்ட்ரானிக்ஸ், சமையல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைச் சாமான்கள், மொபைல் போன்கள் போன்ற பல பொருட்கள் தள்ளுபடி விலையில் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்குத் தர இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கான அமேசான் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் பிரைம் இயக்குனர் அப்டோ கிளாலா,” வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்தே இந்த Everything For You Sale தள்ளுபடித் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். வசந்த காலத்தின் துவக்கத்தில் அமீரக மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எளிதாகவும் தள்ளுபடி விலையிலும் பெற நிச்சயம் இத்திட்டம் உதவும். நிலையான மற்றும் வேகமான டெலிவரி எங்களது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்” என்றார்.

பிரைம் வாடிக்கையாளர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்டர் செய்த அன்றே அல்லது அடுத்த நாளோ தங்களது பொருளை வேகமாக டெலிவரி பெற்றுக்கொள்ளலாம் எனவும் கிளாலா குறிப்பிட்டார்.